வியாழன், 7 ஜூலை, 2016

தலைப்பில்லா கவிதைகள் . கவிதை 5.

நான்
நிற்கும் போதும்
நடக்கும் போதும்
என்னுடைய
ஒவ்வொரு அசைவின் போதும்
அது என்னை விட்டு
முன்போ பின்போ
வலதோ  இடதோ
இறந்தக்காலத்திலோ
எதிர்க்காலத்திலோ
நின்று கொண்டிருக்கிறது எப்போதும் என்னுடன் இருப்பதும் இல்லை
இருக்கப்போவதும் இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக