புதன், 23 டிசம்பர், 2015

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 4.

உற்று நோக்குகிறேன்
என்னுள் இருந்து 
புலி ஒன்று வெளிவந்து 
வேட்டையாடி
புசிக்க விளைகிறது.
பாம்பு ஒன்று வெளிவந்து 
சுருட்டி மடக்கி விழுங்க துடிக்கிறது.
வீச்சரிவாள் ஒன்று புறப்பட்டு
வெட்டி சாய்க்க விழைகிறது.
துப்பாக்கி வெடித்து கிளம்பி
உயிரை மாய்க்க துடிக்கிறது.
காமுகன் ஒருவன் வெளிவந்து
அங்கும் இங்கும் தேடி திரிகிறான்.
பெண்ணொருவள் வெளிவந்து
அவன் கரம் பற்றி தீ மூட்டுகிறாள்.
எல்லாவற்றையும் கடந்து
மனித மிருகம் ஒன்று வெளிவந்து
அன்பை கொட்டி திரிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக