புலியின் மீதேறி கானகத்தில்
வேட்டையாடிக் கொண்டிருந்தபோது
அவளை கண்டேன்
சிங்கத்தின் மீதேறி
சிங்காரமாய்
ஊர்வலம் போகலாம் என்றாள்
என்னை ஏற்றி கொண்டு
காடு முழுவதும்
சுற்றி பாய்ந்து திரிந்து
வேட்டையாடினாள்
தீ மூட்டி விலங்குகளை
புசித்து தின்றாள்
என்னை புணர்ந்து
படுத்துறங்கி எழும்பினாள்
நான் சிங்கத்தின் மீது
அவளுடன் அமர்ந்து
சிங்கார சவாரி செய்து
கொண்டிருப்பதை நீங்கள்
நம்பினால் நம்புங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக