ஒரு குளக்கரையில் நின்று
உற்று நோக்கி கொண்டே இருக்கிறேன்
நீர் வற்றி தாமரை தலை சாய்த்தது
மீன்கள் துடி துடித்து இறந்தன
பாசிகள் மணல் படிந்து மணலோடு
மணலாகிறது
தரை பாள பாளமாய் வெடித்து
செல்கிறது
எங்கிருந்தாவது நீர் வராதா
தவியாய் தவிக்கிறது குளம்
காய்ந்த மனம் போல .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக