தீபாவளி சிறப்பு கட்டுரை .
90களின் மத்தியில் கிராமங்களில் டெக் வீடியோ காட்சிகள் பிரபலம். கிராமங்களில் இருந்து தியேட்டர் சென்று திரைப்படம் பார்ப்பது குறைந்து கொண்டே வந்த காலகட்டம். டூரிங் டாக்கிஸ் அனைத்தும் மூடப்பட்டு விட்ட காலம். இரவு நேரத்தில் விசேச வீடுகளில் வீடியோ DVD மூலம் படம் போடுவார்கள். எனது நண்பன் தான் எங்கள் ஊரில் முழு பொறுப்பு. நான் அவனுக்கு உதவியாக செல்வதுண்டு. பேருந்தில் ஏற்றி இறக்கி கொண்டு அதை பாதுகாத்து இரவில் தெருக்களில் சினிமா ஓட்ட வேண்டும். ஏன் இத்தனை கஷ்டம். எங்கள் இதர செலவுக்கு உறவுகள் உத்தரவாதம்!
ஒரு இரவு தந்தை இயக்கத்தில் மகன் நடிக்கும் படம். அது அவருடைய இரண்டாவது மூன்றாவது படம் என்று நினைக்கிறேன். அது இரண்டாவது காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மொத்தம் நான்கு காட்சிகள் , முதல் காட்சிக்கு அத்தனை கூட்டம் இருக்காது. இரண்டாவது காட்சிக்கு பெண்கள் கூட்டம் அலைமோதும்!!! படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் அந்த காட்சி ஆரம்பிக்கிறது. படத்தின் நாயகன் குளியல் அறையில் உக்கார்ந்து அடுத்த குளியல் அறையில் குளிக்கும் நாயகியின் முதுகில் சோப்பை தேய்க்கிறான். இணைப்பு படத்தை பார்க்கவும். சட்டென்று ஒரு அமைதி அங்கு, என்ன செய்வதென்று எங்களுக்கு தெரியவில்லை. ரீமோட்டை கையில் எடுக்காமல் உட்கார்ந்து விட்டோம். மலையாள படத்தின் காட்சிக்கு எந்த வகையாலும் குறையாத காட்சி அது , அதை இரவு திரையிலுருந்து தெருவுக்கு கொண்டு வந்த பெருமை தமிழ்நாட்டில் அந்த அப்பன் பிள்ளையையும் எங்கள் ஊரில் எங்களையும் சாரும்.
அடுத்தடுத்த காட்சிகளை அப்போது ரீ்மோட்டை கொண்டு ஓட விட்டு அடுத்த நாள் காலையில் அந்த காட்சிகளை பார்த்தது வேறு கதை. இதில் நான்காவது ஐந்தாவது காட்சியில் ஸ்ரீவித்யாவை இயக்குனர் குளிக்க வைத்திருப்பார் . அந்த இயக்குனர் தான் சமூகத்தை தன்னுடைய படங்களில் அதிகம் விமர்சித்திருப்பார், எப்படி இருக்கிறது பாருங்கள் தமிழ் சினிமா இயக்குனர்களின் அக்கறை. அந்த நடிகர் இன்று தமிழ் நாட்டின் இளைய சமூகத்திற்கு தளபதியாம். கீழுள்ள படங்களை காணுங்கள் தமிழன் எந்த நிலையில் அரசியலை முன்னெடுக்கிறான் என்று. தமிழன் ஒரு பொருளாதார அறிவும் நீண்ட கால வளர்ச்சியை முன்னெடுக்கும் தலைவர்களை இந்த நூற்றாண்டிலும் தேடாமல் தன்னுடைய வாழ்க்கையை இவர்களிடம் அடகு வைக்கிறான்.
அந்த நேரத்தில் பாசில், வஸந்த் போன்ற இயக்குனர்கள் இவரின் நடிப்பு வாழ்வில் கை கொடுக்கவில்லையென்றால் அந்த காட்சியை விட சிறப்பான காட்சிகளை அப்பனும் பிள்ளையும் இணைந்து எடுத்து கூட்டத்தை சேர்த்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
நம் தலையெழுத்து இவர்கள் கூட நம்மை ஆள வந்து விடுவார்களோ என்று நினைத்து கொண்டே எதையும் செய்யாமல் வாழ்வது தான்.
ஆனந்த் பிரேம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக