வெள்ளி, 8 ஜூன், 2018

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 21.

உருவமற்ற யானை
எங்கள் வீட்டிற்குள் உலவி கொண்டிருக்கிறது.
யார் எப்பொழுது அழைத்து
வந்தார்கள் என்பதறியாது.
ஒவ்வொரு வீட்டையும்
துதிக்கையையும் தந்தங்களையும்
துணைக் கொண்டு ஆட்டுவிக்கிறது.
தன்னை படைத்தவனுக்காக
மனிதன் உருவாக்கி
பாகனிடம் ஒப்படைத்து
அங்குசத்தை பரிசளித்தான்.
அன்பை போதிப்பதாய்
வீட்டிற்க்குள் வந்த யானை
வன்மத்தை தலையில் ஏற்றுகிறது.
மதங்கொண்டு யானை
பிளிரும் போது
மனிதக் குருதி பெருக்கெடுக்கிறது.
அங்குசத்தை அரசர்கள்
கைக்கொண்டு யானையின்
மீதேறி உலா வருகிறார்கள்
யானை மதம் கொண்டு
எங்கள் வீடுகளை துவசம் செய்து
தன் எஜமானின் ஆலயங்களை
தரைமட்டமாக்கி ஆனந்த
தாண்டவமாடுகிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக