வியாழன், 29 அக்டோபர், 2015

தலைபில்லா கவிதைகள். கவிதை. 2.

ஒரு  குளக்கரையில் நின்று 
உற்று நோக்கி கொண்டே இருக்கிறேன்
நீர் வற்றி  தாமரை தலை சாய்த்தது 
மீன்கள்  துடி துடித்து இறந்தன 
பாசிகள் மணல் படிந்து மணலோடு 
மணலாகிறது 
தரை பாள பாளமாய் வெடித்து 
செல்கிறது
எங்கிருந்தாவது நீர் வராதா
தவியாய் தவிக்கிறது குளம்
காய்ந்த மனம் போல .

புதன், 28 அக்டோபர், 2015

தலைப்பில்லா கவிதைகள் . கவிதை.1.

ஒரு கோட்டின் மீது எனது வாழ்க்கை
பயணித்து கொண்டே இருக்கிறது
விழித்திருக்கும் மனம் போல
முடிவில்லா கோடாய் நீண்டு
கொண்டேஇருக்கிறது
எங்கு முடியும் என்று
எனக்கு தெரியவில்லை
யாரேனும் அறிவீர்களா.