தொலைந்து போவதற்காக
தேடிப் பிடித்து அடர்ந்த
காட்டிற்குள் நுழைந்தேன்
பாதைகள் உற்பத்தியாகி
பலகைகள் வழிநடத்துகின்றன
என்னை கடந்து
வாகனங்கள் விரைகின்றன
மனிதர்கள் அடையாளம் கண்டு
சிரித்து கடக்கிறார்கள்
அங்கங்கே தண்ணீர் தொட்டியில்
நீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன
கம்பி வலைக்குள் மிருகங்கள்
நடமாடி காட்சியளிக்கின்றன
மலையோடைகளில் இயந்திரங்கள்
மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன
மிருகங்களின் தோலாடை
அணிந்த ஒருவன் எதற்காக
வந்தீர்கள் என்றான்.
தொலைந்து போவதற்காக என்றேன்
ஒலியெழுப்பி விட்டு
தவறான பாதையில்
வந்து விட்டீர்கள்
நீங்கள் செல்ல வேண்டிய இடம்
கல் காடுகள் நிறைந்த
நகரம் என்றான்.
தேடிப் பிடித்து அடர்ந்த
காட்டிற்குள் நுழைந்தேன்
பாதைகள் உற்பத்தியாகி
பலகைகள் வழிநடத்துகின்றன
என்னை கடந்து
வாகனங்கள் விரைகின்றன
மனிதர்கள் அடையாளம் கண்டு
சிரித்து கடக்கிறார்கள்
அங்கங்கே தண்ணீர் தொட்டியில்
நீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன
கம்பி வலைக்குள் மிருகங்கள்
நடமாடி காட்சியளிக்கின்றன
மலையோடைகளில் இயந்திரங்கள்
மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன
மிருகங்களின் தோலாடை
அணிந்த ஒருவன் எதற்காக
வந்தீர்கள் என்றான்.
தொலைந்து போவதற்காக என்றேன்
ஒலியெழுப்பி விட்டு
தவறான பாதையில்
வந்து விட்டீர்கள்
நீங்கள் செல்ல வேண்டிய இடம்
கல் காடுகள் நிறைந்த
நகரம் என்றான்.