சனி, 27 ஆகஸ்ட், 2016

தலைப்பில்லா கவிதைகள். கவிதை. 7.

என் அன்னையின் கைகளின்
அரவணைப்பில் நின்ற போதும்
என் தந்தையின் தோளில்
அமர்ந்து  பார்த்த போதும்
உறவுகளிடமும்
நண்பர்களிடமும்               ஒளிந்து கொண்ட போதும்
தெருவின் முனையில்   ஒதுங்கி  நிற்கும் போதும்
கடலின் அலையில் கால்
நனைத்து நிற்கும்  போதும்
மனைவியின் அன்பில் அயர்ந்து தூங்கும் போதும்
அது என்னை பின்
தொடர்வதாய்  உணர்கிறேன்
பயம் அறுத்து அதன் மீது
ஏறி அமர்கிறேன்
என்னை சுமந்து கொண்டு
அதன் போக்கில்  ஓடுகிறது
மீண்டு விடு என்று
மனம் துடிக்க இறங்கி
என் குழந்தையின் பின்னால்
அமர்ந்து கொள்கிறேன்
அது என்னை விட்டு
சென்றுவிட்டதாய் எண்ணி உற்று நோக்குகிறேன்
பதுங்கி நின்று என்னையே பார்த்து கொண்டிருக்கிறது.